- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எமனில் உள்ள தூதரகம் மீது சவுதி அரேபியா திட்டமிட்டு தாக்குதல்: ஈரான் அதிரடி குற்றச்சாட்டு

  சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் உள்ள தங்கள் நாட்டு தூதரம் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.   சவுதி அரேபியா, சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல்...

ஸ்ரீலங்கன் விமான A-340 எயார்பஸ் விமான சேவை இன்று முதல் இடைநிறுத்தம் !

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான A-340 எயார்பஸ் விமான சேவை இன்று முதல் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானமானது இறுதியாக மதுரையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கன் விமானநிறுவனத்திற்கு சொந்தமாக ...

நோர்வே எப்போதும் இலங்கையின் சமாதானத்திற்காக பிரார்த்தனை செய்த நாடு : போர்ஜ் பிராண்டே

நோர்வே எப்போதும் இலங்கையின் சமாதானத்திற்காக பிரார்த்தனை செய்த நாடு என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிராண்டே தெரிவித்துள்ளார்.  வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை...

தாஜூதீனின் மரணம் தொடர்பில்; கைது செய்வதற்கு சிறிய இடைவெளியே உள்ளது : ராஜித

தாஜூதீனின் மரணம் தொடர்பில் தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் எதனையும் மறைக்க தயார் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை...

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையின் தமிழ் அகதிகளுக்கு தமிழக முதல்வரினால் அன்பளிப்புகள் !

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரத்தில் முகாம்களில் வாழும் இலங்கையின் தமிழ் அகதிகளுக்கு பொங்கல் அன்பளிப்புகள் வழங்கப்படவுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இதனை அறிவித்துள்ளார்.  இந்த தைப்பொங்கல் அன்பளிப்புக்கள் ரேசன் அட்டை மற்றும் பொலிஸ்...

கல்முனை மக்களை கிணத்துத் தவளைகளாக வாழ வைக்கவா தமிழ் தலைமைகள் விரும்புகின்றனர்? – பிரதிஅமைச்சர் ஹரீஸ் கேள்வி

  ஹாசிப் யாஸீன் கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தினை மட்டும் தடுக்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் கல்முனையில்வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை கிணத்துத் தவளைகளாக உலக நடப்பின்றி ஒரு குறுகிய வட்டத்திற்குள்ஒரு இருண்ட குக்கிராம மக்களாக வாழ வைக்கவா விரும்புகின்றார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மருதமுனை பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் தரம் 06க்கான அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் இவ்வாறு கேள்விஎழுப்பி தனது கருத்துக்களை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட சிலர் இன்று தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் முஸ்லிம்மக்கள் மட்டும் அவர்களுடைய பிரதேசத்தை மட்டும் அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என்று அறிக்கைவிடுகின்றார்கள். கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் பிரதேசங்களை விட்டு விட்டு முஸ்லிம் பிரதேசங்களை மட்டும்அபிவிருத்தி செய்தால், நாளை பாராளுமன்றத்தில் நகர அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுஎன்பன முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா உரியது, முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா அபிவிருத்தி, தமிழ் மக்களுக்குஅபிவிருத்தி இல்லையா, தமிழ் மக்களை புறக்கணித்து விட்டார்கள் என்று பேசுவார்கள். கல்முனை மாநகர அபிவிருத்தி எல்லாச் சமூகங்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகஎல்லோரையும் அரவணைத்து இந்த அபிவிருத்தியைச் செய்ய வேண்டும் என முயற்சித்து வருகின்றோம். அரசின் நரக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களின் நகரங்கள் சர்வதேச தரத்திற்கு ஒப்பான முறையில் சகலவசதிகளுடன் கூடியவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு அங்குள்ள மக்கள் சகல வசதிகளையும்பெறுகின்றபோது, கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தினை மட்டும் தடுக்கின்ற கல்முனையின் தமிழ்அரசியல் தலைமைகள் கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் கிணத்துத் தவளைகளாக உலகநடப்பின்றி ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஒரு இருண்ட குக்கிராம மக்களாக வாழ வைக்கவாவிரும்புகின்றார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.  கல்முனையின் அபிவிருத்தியை பிற்போடுவதற்கு சில நாசகார சக்திகள் திட்டமிட்டு செயற்படுகின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக எமது தலைமை தமிழ்த் தலைமைகளுடன் பேசியிருக்கின்றநிலையில் சிலரின் இந்த நடவடிக்கைகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் மீண்டும் மனக்கசப்புக்களைதோற்றுவிக்கும் என கவலைப்பட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் சொன்னபடி நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா காத்திருக்கிறது !

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடியிடம் வாக்குறுதி அளித்தபடி உடனடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா காத்திருப்பதாக வெளிவுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை...

நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பு !

நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது இந்தச் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் மிதமான அரசியல் நகர்விற்கு...

அவர்களின் அரசாங்கம் என்பதால், எவரையும் கைது செய்ய முடியும் : மஹிந்த ராஜபக்சே !

வீட்டில் உள்ள சமையல் அறையில் இருக்கும் சட்டி, முட்டி, பானைகள் என சமையல் பாத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பதால், தற்போது தான் ஊடகங்களில் தோன்றுவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மின்சாரத்தில்...

சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடல் !

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.  இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Latest news

- Advertisement -spot_img